வரலாற்றுப் படிவத்தை ஆசிரியர்கள் நிரப்புங்கள் – மாகாண கல்விப் பணிப்பாளர்
ஆசிரியர்கள் அனைவரும் தமது வரலாற்றுப் படிவத்தை நிரப்பிக் கொள்ளுமாறு வடமாகாண கல்வப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
பொது 53 ஏ படிவமாகிய ஒவ்வொரு ஆசிரியர்களின் வரலாற்றுப் படிவமும் தாம் கடமை புரியும் வலயக் கல்வி அலுவலகத்தில் உள்ளது. அதனை அனைத்து ஆசிரியர்களும் நிரப்பிக் கொள்ளுதல் வேண்டும். தமது ஓய்வூதியம் பெறுவதற்கு இப்படிவம் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.