வன்டேஜ் எவ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நாளை
பருத்தித்துறை லீக் கழகங்களுக்கு இடையிலான வன்டேஜ் எவ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு உதய சூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது .
இதன் இறுதியாட்டத்தில் கொழுக்குழாய் சக்திவேல் அணியை எதிர்த்து உடுத்துறை செந்தமிழ் அணி மோதவுள்ளது. பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தலைவர் எம். நவநீதமணி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜவ்வர்உமர் , சிறப்பு விருந்தினர்களாக மருதங்கேணி பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளர் ஏ.அருளானந்தசோதி, மருதங்கேணி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ். திரவியராசா, ஆகியோர் கலந்து கொள்ளவுள்னர்.