வட.இந்து மகளிர் கல்லூரியினரால் விழிப்புணர்வு நடைபவனியும் வீதி நாடகமும் முன்மாதிரியான செயற்பாடு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியினரால் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் சுற்றாடல் முன்னோடி கழகம் நடாத்தும் விழிப்புணர்வு நடைபவனியும் வீதி நாடகமும் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நடைபவனி வட.இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி 1ம் கட்டை சந்தி சென்று பருத்தித்துறை பிரதான வீதியூடாக பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையம் வரை சென்று பின்னர் வீ.எம் வீதியூடாக கல்லூரிக்கு வருகை தரவுள்ளனர்.