வடிகாலை மூடி விளையாட்டு அரங்கு!! -எதிர்த்து ஈச்சமோட்டை மக்கள் போராட்டத்தில்-
யாழ்ப்பாணம் பாசையூர் பாடுமீன் விளையாட்டுகழகத்திற்கும், ஈச்சமோட்டை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்திற்கு இடைப்பட்ட வெள்ளவாய்க்காலை மூடி அதன் மேல் விளையாட்டு அரங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான நிதியினை மாவை சேனாதிராஜா கம்பரலிய திட்டத்தின் ஊடான நிதி உதவியின் கீழ் குறித்த விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு நிதிஉதவி வழங்கியிருந்த நிலையில் ஈச்சமோட்டை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.