வடமாகாண வொலிபோல் தொழில் நுட்ப இணைப்பாளர் கருணாகரன் – யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தால் கெளரவிப்பு

கரப்பந்தாட்ட தொழிநுட்ப மற்றும் பயிற்றுநருக்கான volleyball Developmet Commission member வட மாகாண இணைப்பாளராக
யாழ்மாவட்ட கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின்
தலைவர் த.கருணாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கான கெளரவிப்பு நிகழ்வு அண்மையில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்க தலைவர் வ.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு இணைந்த சுகாதார விஞ்ஞான பீட தலைவர் கலாநிதி சி.சபா ஆனந் அவர்களினால் இவருக்கான பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னத்தை வழங்கி வைத்தார்.
இலங்கை கரப்பந்தாட்ட சங்கத்தினால் மத்திய ஆசிய (CAVA) கரப்பந்தாட்ட சங்க செயலாளரும் மற்றும் இலங்கை கரப்பந்தாட்ட சங்க செயலாளருமான நாலக அவர்களினால்
நியமனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.