Sun. Sep 8th, 2024

வடமாகாண வீர வீராங்கனைகளுக்கான மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள்

அரியாலை சன சமூக நிலையம் மற்றும் அரியாலை நூல் நிலையம் ஆகியன இணைந்து தமது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தும் வடமாகாண வீர வீராங்கனைகளுக்கான மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டங்கள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

பங்கு பற்றவிரும்புவோர் அரியாலை சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கு காலை 6 மணிக்கு முதல் சமூகம் தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆண்களிற்கான மரதன் ஓட்டம் அமரர் பேரின்பநாதன் குடும்பத்தினர்,  பெண்களிற்கான மரதன் ஓட்டம் திரு.திருமதி காந்தன் (லண்டன்), 50 கிலோ மீற்ரர் ஆண்களிற்கான சைக்கிள் ஓட்டம் அமரர் பத்மநாதன் இராதாதேவி ஞாபகார்த்தமாக அன்னாரின் புதல்வி திருமதி கலைமதி மகிந்தன் (லண்டன்), பெண்களிற்கான 25 கிலோ மீற்ரர் அமரர் பூவிலங்கம்மலர் ஞாபகார்த்தமாக அன்னாரின் புதல்வன் திரு. கவிலதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் அனுசரணையில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்