வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் மீண்டும் சம்பியனாகியது மன்னர் கல்வி வலயம்
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் மன்னார் கல்வி வலயம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.
இதில் நடைபெற்று முடிந்த மெய்வல்லுனர் போட்டி முடிவுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயம் 797.8 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் யாழ்ப்பாண கல்வி வலயம் 613.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் வலிகாமம் கல்வி வலயம் 467 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் மடு கல்வி வலயம் 232 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் முல்லைத்தீவு கல்வி வலயம் 217.3 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தையும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயம் 192 புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தையும் வவுனியா தெற்கு கல்வி வலயம் 184 புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தையும் வவுனியா வடக்கு கல்வி வலயம் 158 புள்ளிகளைப் பெற்று எட்டாம் இடத்தையும் வடமராட்சி கல்வி வலயம் 115 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தையும் துணுக்காய் கல்வி வலயம் 107 புள்ளிகளைப் பெற்று பத்தாம் இடத்தையும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயம் 81 புள்ளிகளைப் பெற்று பதினோராம் இடத்தையும் தென்மராட்சி கல்வி வலயம் 76 புள்ளிகளைப் பெற்று பன்னிரண்டாம் இடத்தையும் தீவகம் கல்வி வலயம் 48.3 புள்ளிகளைப் பெற்று பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்