வடமாகாண மல்யுத்தம் முல்லைத்தீவு மாவட்டம் தங்க வேட்டை

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட அணிகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் 20 தங்கப் பதக்கங்களில்15 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அணிகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தப் போட்டி முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டம் 5 தங்கப் பதக்கங்கள் 3 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட 8 பதக்கங்களை கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தையும்
யாழ்ப்பாண மாவட்டம் 3 தங்கப் பதக்கங்கள் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தையும், வவுனியா மாவட்டம் 2தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளி பதக்கங்கள் 2 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை கைப்பற்றி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டம் 10 தங்கப் பதக்கங்கள் ஒரு வெள்ளி பதக்கம் உட்பட 11 பதக்கங்களை கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து 6 ஆண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டம் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.