வடமாகாண போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்
வடமாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுக்கள் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதில் இன்று 20 வயதிற்குட்பட்ட ஆண், பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாண மத்திய கல்லூரி, கனகரத்தினம் மத்திய கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானங்களிலும்,
யூடோ, வூசு, தைக்கொண்டோ, மல்யுத்தம், குத்துச்சண்டை, ரக்பி போன்ற போட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலும்,
17,20 வயதிற்குட்பட்ட ஆண், பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக் கழக கடற்கரை மைதானத்திலும் நடைபெறவுள்ளது.