Thu. Apr 24th, 2025

வடமாகாண பெண்களுக்கான வேக நடை முதல் மூன்று இடங்களையும் யாழ் மாவட்டமும், சம்பியன் கிண்ணத்தை மன்னார் மாவட்டமும் பெற்றனர்.

வடமாகாண மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வேக நடை போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ் மாவட்ட வீராங்கனைகளும் சம்பியன் கிண்ணத்தை மன்னார் மாவட்டமும் கைப்பற்றினர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையிலான மாகாண மட்ட வேக நடை போட்டி இன்று சனிக்கிழமை மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான போட்டியில் முதல் 6 இடங்களைப் பெறும் வீராங்கனைகள் தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ஆர் டனுசியா முதலாமிடத்தையும், யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.தமிழரசி இரண்டாமிடத்தையும், யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.கெளசியா மூன்றாமிடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.எஸ். பில்லிகிறேஸ் நான்காமிடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.ஏ.அனுஜா ரிவேல் ஐந்தாமிடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கம்ஷிகா ஆறாமிடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்