Mon. Dec 9th, 2024

வடமாகாண பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் மாவட்டம் சம்பியன்

வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் வடமாகாண மாவட்ட செயலக அணிகளுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டியில் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை வவுனியா யங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் யாழ் மாவட்ட அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட அணி மோதியது. முதல் சுற்றில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இதனால் இரு அணிகளுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. இதில் இரு அணிகளின் வீராங்கனைகள் சிலர் மயக்கமுற்ற போது அந்த சுற்று இரத்துச் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு சுற்றுகளிலும் யாழ் மாவட்ட அணி அபாரமான திறமையை வெளிக்காட்டி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்