வடமாகாண பளுதூக்கல் யாழ் மாவட்டம் முதலிடம்

மாவட்ட அணிகளுக்கிடையிலான வடமாகாண பளுதூக்கல் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் யாழ் மாவட்ட அணியினர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
மாவட்ட அணிகளுக்கிடையிலான வடமாகாண பளுதூக்கல் பளுதூக்கல் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் துரையப்பா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில் யாழ் மாவட்ட அணி 9 தங்கப் பதக்கங்கள்,6 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கல பதக்கம் உட்பட 16 பதக்கங்களை கைப்பற்றி முதலாமிடத்தையும், கிளிநொச்சி மாவட்ட அணி ஒரு தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாமிடத்தையும், வவுனியா மாவட்ட அணி 2 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் யாழ் மாவட்ட அணி 8 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கல பதக்கங்கள் உட்பட 18 பதக்கங்களை கைப்பற்றி முதலாமிடத்தையும், வவுனியா மாவட்ட அணி 2 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் உட்பட 6 பதங்களை கைப்பற்றி இரண்டாமிடத்தையும், முல்லைத்தீவு மாவட்ட அணி ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கல பதக்கங்கள் உட்பட 3 பதக்கங்களை கைப்பற்றி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.