வடமாகாண பளுதூக்கல் போட்டிகள் செவ்வாய்க்கிழமை
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளுதூக்கல் போட்டிகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு யாழ் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 17,20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியும், புதன் மற்றும் வியாழக்கிழமை 17, 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியும் நடைபெறவுள்ளது.