வடமாகாண நாட்டிய நாடக போட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதிப்பு – தேசியத்திற்கு தகுதி

அகில இலங்கை வடமாகாண நடனப்
போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவர்கள் நாட்டிய நாடகப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அகில இலங்கை வடமாகாண நடனப் போட்டிகள் பளை மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகளால் அரங்கேற்றம் செய்யப்பட்ட “இராவணன் பேசுகிறேன்” எனும் நாடகம் முதலாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.