Mon. Aug 10th, 2026

வடமாகாண நடனப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி ஜெ.மாதினீ தேசிய மட்ட போட்டிக்கு தகுதி

அகில இலங்கை வடமாகாண நடனப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் ஜெ.மாதினீ எனும் மாணவி முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அகில இலங்கை வடமாகாண நடனப் போட்டிகள் பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.மாதினீ சிரேஷ்ட பிரிவில் பாரதிதாசன் பாடலில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். அத்துடன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த ந.சகானா இரண்டாமிடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed