வடமாகாண சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாக முல்லைத்தீவு மாவட்ட தர்சிகா தெரிவு
வடமாகாணத்தின் 2026ம் ஆண்டுக்கான சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் முன்னாள் பாண்டியன்குளம் மகா வித்தியாலய மாணவியும் தற்போது சிறி ஜெயவர்த்தனே புர பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுவரும் தேவராசா தர்சிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்டங்களுக்கு இடையிலான பெண்களுக்கான பளு தூக்கும் போட்டி நேற்று சனிக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் முல்லைத்தீவு மாவட்ட அணியை பிரதிநிதித்துவம் செய்த தேவராசா தர்சிகா 48 கிலோ எடை பிரிவில் 105 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தை பெற்றதோடு 2026ம் ஆண்டுக்கான சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.