Tue. Oct 6th, 2026

வடமாகாண சபை பிரதம கணக்காளர் அகிலன் அவர்களின் பெரும் முயற்சியால் வடமாகாண சபை அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்

வடமாகாண சபை பிரதம கணக்காளர் அகிலன் அவர்களின் பெரும் முயற்சியால் அரச உத்தியோகத்தர்களுக்கான அகில இலங்கை தேசிய மட்ட ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வடமாகாண சபை அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகள் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான 3ம் இடத்திற்கான போட்டியில் வடமாகாண சபை அணியை எதிர்த்து கொழும்பு சிறைச்சாலை அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் வடமாகாண சபை அணி 14:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed