வடமாகாண கூடைப்பந்து யாழ் கல்வி வலய பாடசாலைகள் சாதிப்பு
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை அணியும்,
இரண்டாமிடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியும்
மூன்றாமிடத்தை வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை அணியும் பெற்றுக் கொண்டனர்.