Thu. Jan 23rd, 2025

வடமாகாண கல்விப் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட அறிவித்தல்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டித் தொடரில் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் காணப்படின் உடனடியாக அதிபர்கள் தனக்கு தெரியப்படுத்துமாறு வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
அ‌கில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டிக்கு வடமாகாணத்தில் இருந்து 486 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகள், பாதுகாப்பு, உணவை பெற்றுக் கொள்ளல் என்பவற்றை அதிபர்கள் மற்றும் அழைத்துச் செல்லும் பொறுப்பாசிரியர்கள் கவனமெடுத்தல் வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடுகள் காணப்படின் உடனடியாக அழைத்துச் செல்லும் பொறுப்பாசிரியர்கள் அதிபர்களூடாக  தனக்கு தெரியப்படுத்துமாறு வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்