வடமாகாண ஆண்களுக்கான வேகநடை மன்னார் மாவட்டம் சம்பியன் கிளிநொச்சி மாவட்ட கலையரசன் தங்கம்

வடமாகாண மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான வேகநடைப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.கலையரசன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதோடு, மன்னார் மாவட்டம் சம்பியன் கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான வேகநடைப் போட்டி நேற்று சனிக்கிழமை மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெற்றது.

இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டம் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இப்போட்டியில் முதல் பத்து இடங்களை பிடித்தவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.கலையரசன் முதலாம் இடத்தையும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.சஜிந்தன் இரண்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த டி.தர்சன் மூன்றாம் இடத்தையும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பி.கோபிநாத் நான்காம் இடத்தையும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த விலிவண்ணன் ஐந்தாம் இடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.துவாரகன் ஆறாம் இடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கேதீஸ் ஏழாம் இடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.ஜனார்த்தன் எட்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பி.டக் ஷன் ஒன்பதாவது இடத்தையும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.நிரோஷன் பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.