வடமாகாணத்தில் 68 ஆயிரத்து 777 மாணவர்களுக்கு பாதணிகளுக்காக கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது
வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கஸ்ட மற்றும் அதிகஸ்ட 68 ஆயிரத்து 777 மாணவர்களுக்கு பாதணிகள் வாங்குவதற்கான 3ஆயிரம் பெறுமதியான கூப்பன்கள் வழங்கப்படவுள்ளதாக
வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோண் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
பாதணிகளுக்கான கூப்பன்களை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 4ம் திகதி திங்கட்கிழமை வேலணை மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தில் 2023ஆம் அண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட கஸ்ட, அதிகஸ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் வெளி மாணவர்களுக்கே பாதணிகளுக்கான கூப்பன்களை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வேலணை மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
2023.11.24 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் கௌரவ கல்வி அமைச்சரினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் 2023.12.04 ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மாகாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.