வடமாகாணத்தில் பாடசாலை விளையாட்டு சங்கங்களை உருவாக்க கோரிக்கை
வடமாகாணத்தில் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கங்களை உருவாக்குமாறு விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது இலங்கையில் உள்ள பல மாகாணங்களிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுச் சங்கங்களை உருவாக்கி போட்டிகளை ஒழுங்குபடுத்துகின்றனர். இதனை வடமாகாணத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் பாடசாலை சங்கங்களினால் பல்வேறுபட்ட போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. குறித்த சங்கங்களின் கிளைச் சங்கங்களாக பாடசாலை விளையாட்டு சங்கங்கள் செயற்படுவதனால் பல்வேறுபட்ட போட்டிகளை நடாத்தி வீரர்களின் பயிற்சிக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.