Sat. May 16th, 2026

வடமாகாணத்தின் முதலாவது இல்ல மெய்வல்லுநர் போட்டி கலட்டியில் நாளை ஆரம்பம்

வடக்கு மாகாணத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாவது இல்ல மெய்வல்லுநர் போட்டியை நடாத்தும் பெருமையை பருத்தித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பெற்றுள்ளது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் பெப்ரவரி மாதம் 13ம் திகதிக்கு முன்னர் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகளை நடாத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பருத்தித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் திருநாவுக்கரசு அரவிந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை கோட்ட கல்விப் பணிப்பாளர் கந்தசாமி கண்ணன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை மறைகோட்ட முதல்வரும் பங்குத் தந்தையுமான அருட்தந்தை த.ஜெ.கிருபாகரன் மற்றும் வடமராட்சி கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் கிருஸ்ணபிள்ளை பாக்கியநாதன் ஆகியோரும் கெளரவ விருந்தினராக பாடசாலை பழைய மாணவனும், இலங்கை கபடி அணி வீரருமான கருணாகரன் பிரதாப் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed