Sat. Feb 15th, 2025

வடமாகாணத்தின் முதலாவது இல்ல மெய்வல்லுநர் போட்டி கலட்டி றோ.க.த.பாடசாலையில்

2025ம் ஆண்டுக்கான வடமாகாணத்தின் முதலாவது இல்ல மெய்வல்லுநர் போட்டி பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை யா/ கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் திருநாவுக்கரசு அரவிந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன், சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத் தந்தையுமான அருட்தந்தை த்.ஜெ.கிருபாகரன், வடமராட்சி கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கி.பாக்கியநாதன், பாடசாலையின் பழைய மாணவன் யே.ஜெயபாலன், கெளரவ விருந்தினராக ஓய்வு நிலை சிரேஷ்ட ஆசிரியர் திருமதி விஜயராணி சிவகடாட்சம் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த வருடமும் தமது மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை முதலாவதாகவும், வடமராட்சி கல்வி வலய கபடிப் போட்டியை சிறப்பான ஒழுங்குபடுத்தலுடனும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்