வடமாகாணத்தின் சிறந்த பளுதூக்கும் வீராங்கனையாக ரி.அபிஷாக்

வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்திய வடமாகாண பளுதூக்கல் போட்டியில் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக யாழ் மாவட்ட அணி வீராங்கனை ரி.அபிஷாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட அணிகளுக்கிடையிலான வடமாகாண பளுதூக்கல் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் துரையப்பா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்ட அணியை பிரதிநிதித்துவம் செய்த ரி.அபிஷேக் 55 கிலோ எடை பிரிவில் சினெச் முறையில் 64 கிலோ பளுவையும், கிளின் அன் ஜக் முறையில் 85 கிலோ பளுவையும் மொத்தமாக 149 கிலோ பளுவை தூக்கி சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். இவரிற்கு ஹரி அவர்களினால் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.