Thu. Sep 17th, 2026

வடமராட்சி வொலிபோல் உடுப்பிட்டி பாடசாலைகள் ஏக ஆதிக்கம் செலுத்தி சம்பியன்

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வொலிபோல் போட்டியில் உடுப்பிட்டி பாடசாலைகள் ஆதிக்கம் செலுத்தி சம்பியன் கிண்ணங்களைச் சுவீகரித்துக் கொண்டனர்.

16, 18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியும், பெண்கள் பிரிவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும் சம்பியன் கிண்ணங்களைச் சுவீகரித்துக் கொண்டனர்.

16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணி முதலாம் இடத்தையும், உடுத்துறை மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தையும் தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலய அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி முதலாம் இடத்தையும் உடுத்துறை மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தையும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான போட்டியில் 16 வயதிற்கு உட்பட்ட போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி முதலாம் இடத்தையும் வல்வை மகளிர் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

18 வயதிற்கு உட்பட்ட போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி முதலாம் இடத்தையும், பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும், வல்வை சிவகுரு அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்

About The Author

Share This:

Leave a Reply