Sat. Feb 24th, 2024

வடமராட்சி வல்வைப் படுகொலை 30 ஆவது ஆண்டு நினைவு நாள்

அமைதி காக்கும் படை என்ற போர்வையில் ஈழ மண்ணில் கால்பதித்திருந்த இந்திய படைகள் வல்வெட்டித்துறையில் நரவேட்டையாடிய நாள் இன்றாகும்!
ஊரிக்காடு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சுதர்சன்சிங், துணைப்பொறுப்பாளர் கப்டன் கபூர் மற்றும் பொலிகண்டி முகாமின் பொறுப்பதிகாரி கப்டன் கோபாலகிருஸ்ணமேனன் ஆகியோர் தலைமையில் நடாத்திய வல்வைப் படுகொலை சம்பவத்தில் சுமார் 64 பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்ப்பட்டும் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். அத்துடன் பெறுமதிமிக்க சொத்துக்கள் ஆவணக்கள் சூறையாடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இனக் கலவரமா..? இனப்படுகொலையா..? இன அழிப்பா..?;
– இன்று வல்வைப் படுகொலைகளின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம்…!-(1989 ஆகஸ்ட் 2 – 2019 ஆகஸ்ட் 2)
இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு வரும் 1948 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும், படுகொலைகளும் நடந்து வருகின்றன.1958 இலும், 1977 இலும்,1983 இலும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழத்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் இன அழிப்பு என்பவற்றை மூடி மறைப்பதற்காக “இனக்கலவரம்” என்ற சொல்லால் பேரினவாதம் மூடி மறை
க்க முயற்சி செய்து வரும் நிலையில்,  மே 18 – தமிழினப் படுகொலை தொடர்பான வருடாந்த நினை வேந்தலின் ஒரு பகுதியாக இவ்வாண்டு  இரண்டு நாள் நிகழ்வுகளில், முதலாம் நாள் மே மாதம்  11 ஆம் திகதி இனவழிப்பு (Genocide) தொடர் பான ஓர் கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தது. தமிழ் ஊடக வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என சொல்லக் கூடிய வகையில் இனவழிப்பு தொடர்பான சமகால சமூக, சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான பார்வைகள், குறிப்பாக தமிழ் சமூகம் எவ்வாறாக மே 18 இனவழிப்பை அடுத்த சந்ததி யினருக்கு புரியச் செய்தல் அது தொடர்பான விழிப்பூட்டலை மையமாக கொண்ட ஒரு கருத்தரங்காக அது அமைந்திருந்தது.
இதில் இலங்கதாஸ் பத்மநாதன் அவர்களின் தலைமையில் ஈழத்து அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தி, சர்வதேச சட்ட ஆய்வாளர் ஜனகன் முத்துக்குமார், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி மற்றும் வல்வை ந. அனந்தராஜ் ஆகியோர் கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.
குறித்த கருத்தரங்கில் முதலாவது பேச்சாளராக வல்வை ந.அனந்தராஜ், தனது ‘வல்வைப் படுகொலை’ என்ற நூலாக்கம் 1989 – 2019 ,30 ஆண்டுகள் , வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்திருந்த படுகொலைகள், அதிலிருந்து தப்பி இந்தியா சென்று குறித்த படுகொலையை பின்னர் ஒரு சாத்தியக்கூற்று நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியமை, அதற்கு இந்திய பின்னைநாள் பாதுகாப்பு அமைச்சர் முன்னுரை வழங்கியது பற்றியும், வரலாற்றுக்களை ஏன் தொடர்ச்சியாக பேணவேண்டும், எவ்வாறாக அதை அடுத்த சந்ததியினருக்கு கடத்தவேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
வல்வைப் படுகொலையின் 30 ஆவது ஆண்டின் துயரங்களின் நினைவாக நான் ஆற்றிய உரை YOU TUBE இல் தரப்பட்டுளளது. அதனைப் பார்வையிடலாம்.. இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் மேற்கொண்ட படுகொலைகள் உலகளாவிய ரீதியில் இந்தியாவுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்கும், ஈழத்தில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறுவதற்கும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் அவர்களின் அணிந்துரையுடன் கூடியதாக வெளியிடப்பட்ட வல்வைப் படுகொலை கள் என்று தமிழிலும். INDIA’S MYLAI என ஆங்கிலத் திலும் எழுதப்பட்ட இரு நூல்களும் ஒரு காரணமாகும்.
இந்த நினைவுகள் தொடர்பாக வல்வைப் படுகொலைகள் தொடர்பான சிறப்பிதழை  (EKURUVI) கனடாவில் வெளியிடும் அதேவேளையில் பிரபல குறும்படத் தயாரிப்பாளரும். இயக்குனருமான மதிசுதாவினால் நெறிப்படுத்தப்பட்டு தயாரிக்கப் பட்ட வல்வைப் படுகொலைகள் தொடர்பான ஆவணப்படமும் இன்று வெளியிடப்படுகின்றது. இதன் மூலமாவது இந்தியாவை எமது தாய்நாடாக நேசிக்கும் ஈழத்தமிழர்களுக்காக, இந்தியா குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1919 இல் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்கில் பிரித்தானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளபபட்ட படுகொலைகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானிய பாராளுமன்றததில், முன்னாள் பிரதமர் தெரேசா மே வருத்தம் தெரிவித்தமை போன்று, 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்காக இந்தியாவும் தனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் எமது மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்…
வல்வெட்டித்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் படையினர் 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 2ஆம், 3 ஆம், 4 ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டத்தை;ப பிறப்பித்துவிட்டு மேற் கொண்ட மிலேச்சத்தனமான வல்வைப் படுகொலை களின் நினைவு தினமான இன்று……இந்தப் படுகொலைகளின் பொழுது துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட பெண்கள்,சிறுவர்கள், மாணவர்கள், வயோதிபர்கள் உட்பட களத்தில் கொல்லப்பட்ட 63 பேருடன் காயப்பட்டு சிகிச்சை பலனின்றிப் பின்னர் இறந்த 8 பொதுமக்;கள் உட்பட அநியாயமாகக் கொல்லப்பட்ட 71 அப்பாவிப் பொது மக்களுக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்து அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்