Thu. Mar 12th, 2026

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட் சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட் சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக நீர் வழங்கல் இரு பனல் போட் காணப்படுகிறது.
இதிலிருந்து நீர் வழங்குவதற்காக இன்று திங்கட்கிழமை ஊழியர் சென்று பார்த்த போது பம் வைக்கும் பனல் போட் இரண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு, பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு பனல் போட்டும் சேதப்படுத்தப்பட்ட போதிலும் நீர் வழங்கல் இயந்திரத்தில் சேதம் எற்படாமையால் நீர் வழங்குவதில் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பம் பனல் போட்டில் இருந்து பருத்தித்துறை வல்வெட்டித்துறை, கரவெட்டி பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed