Thu. Sep 17th, 2026

வடமராட்சி வலைப்பந்தாட்டம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அணி சம்பியன்

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெண்களுக்கான 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் வதிரி திரு இருதயக் கல்லூரி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மோதியது.

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அணி 17:14 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

மூன்றாம் இடத்தை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அணி பெற்றனர்

About The Author

Share This:

Leave a Reply