வடமராட்சி வலய 1500 மீற்றர் ஓட்டத்தில் ஹாட்லிக் கல்லூரிக்கு தங்கம்

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டியில் 1500 மீற்றர் ஓட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.விகாசன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். விகாசன் தங்கப் பதக்கத்தையும், நெல்லியடி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.டிதர்சன் வெள்ளிப் பதக்கத்தையும், சிதம்பரக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.சந்தோஸ் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.