Thu. Oct 3rd, 2024

வடமராட்சி வலய பெண்கள் கரப்பந்தாட்டம் சம்பியன் கிண்ணங்களை வழித்து துடைத்தது உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் அனைத்து வயதுப் பிரிவிலும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று செவ்வாய்கிழமை திரு இருதயக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் முதலாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணியும், மூன்றாமிடத்தை வட.இந்து மகளிர் கல்லூரி அணியும் பெற்றனர்.
18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தை பருத்தித்துறை சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணியும்,  மூன்றாமிடத்தை வல்வை மகளிர் கல்லூரி அணியும் பெற்றனர்.
16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும்,  இரண்டாமிடத்தை கெருடாவில் இந்துக் கல்லூரி அணியும்,  மூன்றாமிடத்தை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணியும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்