வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
வடமராட்சி லயன்ஸ் கழக தலைவர் பி.ருவேந்திரா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அறிமுக உரையை வருகை விருவுரையாளரும் ஓய்வுநிலை அதிபருமாகிய செ.சேதுராஜா அவர்களும், நிகழ்த்தவுள்ளதுடன் வளவாளர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆ.நித்திலவர்ணன், இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பணிப்பாளர் கிருஷ்ணபிள்ளை கந்தவேள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.