Wed. Mar 11th, 2026

வடமராட்சி முள்ளி வெளியில் வழிப்பறி கொள்ளை

கரவெட்டி முள்ளி பகுதியில் கத்தியை காட்டி அச்சுறுத்தி கையடக்க தொலைபேசி மற்றும் பணம் களவாடப்படுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை வடமராட்சி முள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கரவெட்டி பகுதியில் இருந்து  வரணிக்கு சென்று கொண்டிருந்த போது முள்ளி பகுதியில் கத்தியை காட்டி அச்சுறுத்தி  கையடக்க தொலைபேசி  மற்றும் சிறு தொகை பணம் களவாடப்படுள்ளது.

தனி ஒரு நபரால் இந்த வழிப்பறி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்த நபர் கத்தியை காட்டி சைக்கிளில் சென்ற நபரிடம் இந்த வழிப்பறியை நிகழ்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed