வடமராட்சி முள்ளி பாலத்தருகில் பயணிகள் பேருந்து தடம்புரண்டது
வடமராட்சி முள்ளிப் பாலத்திற்கு அருகில் இன்று காலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேரூந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை வடமராட்சி முள்ளிப் பாலத்திற்கருகில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்ட பேருந்தே வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.
இதில் பயணிகள் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை. மழை காலங்களில் இரும்பினாலான பாலங்களில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.