வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் திருமதி. சத்தியபாமா நவரட்ணம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மோகனசுந்தரம் தெய்வேந்திரா கலந்து கொள்ள உள்ளார்.