வடமராட்சி புலோலி பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து 2 வயதுக்கு குழந்தை உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகம்

வடமராட்சி புலோலி பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து 2 வயதுக்கு குழந்தை உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி குரும்பைகட்டி புலோலி தெற்கு புலோலி பகுதியைச் சேர்ந்த ஆதித்தனன் ஆதர்ஷ் எனும் 2 வயதுக் குழந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்தே உயிரிழந்துள்ளார். மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் அவர்கள் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.