வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரை பகுதியில் 6 கோடி ரூபா மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரை பகுதியில் 6 கோடி ரூபா மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு உதயசூரியன் கடற்கரை வாடிக்கும் சிறுவர் பூங்காவிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலீஸாருடன் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கஞ்சாவை கடத்தியவர்கள் தப்பியோடிய போதிலும் 6 கோடி மதிப்புள்ள சுமார் 350 கிலோ கிராம் நிறை கொண்ட 154 பொதிகளைக் கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.