வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை வதிரி முன்பள்ளி விளையாடி மகிழ்வோம் விளையாட்டு விழா

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை வதிரி முன்பள்ளி விளையாடி மகிழ்வோம் விளையாட்டு விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உல்லியநெல்லை அம்மன் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஓய்வுநிலை இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் சிவலிங்கம் சத்தியசீலன், சிறப்பு விருந்தினர்களாக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியசீலன், நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் நாகராசா ரவீந்திரன், கரவெட்டி கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி பாலகிருஷ்ணன் கலைவாணி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.