Fri. Mar 21st, 2025

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மற்றும் கணபதி அறக்கட்டளை நிறுவனம் இணைந்து தொடர் சிரமதான பணி பலரும் பாராட்டு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மற்றும் கணபதி அறக்கட்டளை நிறுவனம் இணைந்து தொடர் சிரமதான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை “கிளீன் ஸ்ரீலங்கா” எனும் திட்டத்தின் கீழ் மாலுசந்தி தொடக்கம் பருத்தித்துறை வீதியில் இருமருங்கிலும் காணப்பட்ட புற்கள் மற்றும் பற்றைகள் மற்றும் டெங்கு பெருகக்கூடிய கழிவுகள் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையும் கணபதி அறக்கட்டளையும் இணைந்து
 மாலைசந்தியிலிருந்து அல்வாய் முத்துமாரியம்மன் கோவில் வரையான பிரதான வீதியின் இருமருங்கிலும், அல்வாய் பாரதிதாசன் சனசமுக நிலையம் வரை முதல் கட்டமாகவும், அல்வாய் பாரதிதாசன் சனசமுக நிலையதில் இருந்து ஆரம்பித்து அல்வாய் முத்துமாரியம்மன் கோவில் வரை இரண்டாம் கட்டமாக நடைபெற்று
இதில் விசேடமாக பல வருடங்களாக அல்வாய் வீதியில் பல விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்த பாரிய மரங்களை கனகர வாகனம் மூலமாக அகற்றப்பட்டு வீதியால் போக்குவரத்து செய்வதில் இருந்த தடைகள் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்