Sat. Feb 15th, 2025

வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையும் கணபதி அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து கீளின் ஸ்ரீலங்க முன்மாதிரியான செயற்பாடு பலரும் பாராட்டு

வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையும் கணபதி அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து கீளின் ஸ்ரீலங்க என்னும் தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை

மாலுச்சந்தியிலிருந்து அல்வாய் முத்துமாரியம்மன் ஆலய வீதி வரைக்குமான சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் கொண்ட பிரதான வீதியை மக்களை இணைத்து பற்றைகளை வெட்டி புற்களை செதுக்கி தூய்மையாக்கும் செயற்பாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

இவ் ஊர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இணைந்து சுற்றுச் சூழல் செயற்பாடுகளை செயற்பட்டுள்ளமை மிகவும் பாரட்டத்தக்கதாகும் என்பதுடன் கரவெட்டி பிரதேச சபை சார்பில் அனைத்து செயற்பாட்டாளருக்கும் பொது மக்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பணிகளில் கட்டைவேலி உப அலுவலரின் வழிகாட்டலில் சபை ஊழியர்களும் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார்கள்.

பிரதேச சபை மக்களுடன் பல வேலைத்திட்டங்களை இணைந்து செயற்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதால் தன்னார்வு நிறுவனங்களும் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்கி இவ்வாறான செயற்பாடுகள் மிக நேர்த்தியாக செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளில் சபை செயலாளர் மிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். சபையுடன் இணைந்து செயலாற்றிய மக்களும் கணபதி அறக்கட்டளை நிறுவனத்தினருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு  மக்கள் அணிதிரள வேண்டும் என கரவெட்டி பிரதேச செயலாளர் கணேசன் கம்ஸநாதன் பொது அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்