வடமராட்சி கிழக்கில் வெங்காய செய்கை பாதிப்பு. உச்சந்தலையில் அடித்த மழை.
யாழ்.வடமராட்சி கிழக்கில் தாழ்நில பகுதிகளில் வெங்காய செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கடந்த சி ல நாட்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை ஒரே நாளில் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தது. வெங்காயம் அறுவடை நேரத்தில் அதிக மழை பொழிந்ததால் அதிகம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறிய கட்டுமரங்களை கொண்டுவந்து மீட்க கூடிய வெங்காயத்தை உடனடியாக அறுபடை செ ய்த விவசாயிகள் அதனை வெளியே எடுத்துவந்தனா்.