வடமராட்சி இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆணையிறவு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த ஹட்லிக்கல்லூரி முன்னாள் மாணவன் சுந்தரமூர்த்தி சத்தியன் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
யாழ் போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.