வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தின் மரம் நாட்டும் நிகழ்வு

வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் 50வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு “நீரைப் பாதுகாப்போம்” எனும் கருப்பொருளிற்கு அமைவாக

வல்லிபுரம் நீர் உள்ளெடுப்பு நிலையத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையுடன் இணைந்து மரம் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு நடைபெற்றது.

ஓய்வு நிலை மேலதிக அரசாங்க அதிபர் செ. ஸ்ரீவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக யாழ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் வே.உதயசீலன்,

யாழ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் த.யசோதரன்,

பருத்தித்துறை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் பொறுப்பதிகாரி கு.மதிவண்ணன், ஆசிரியர் பா.சசிகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.