வடமராட்சியில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நாளை
வடமராட்சி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதியாட்டத்தில் கொலின்ஸ் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய அணி மோதவுள்ளது.
40 வயதிற்கு மேற்பட்ட கால்பந்தாட்ட போட்டியின் தலைவர் கே.உதயசங்கர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சிட்னி அவுஸ்திரேலியா TFNSW கொமேர்சஸ் முகாமையாளர் ரி.சிவசக்தி, சிறப்பு விருந்தினராக இலங்கை ரெலிகொம் பொது முகாமையாளர் எஸ்.நவநீதன் மற்றும் கெளரவ விருந்தினர்களாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி ஆசிரியர் ரி.செல்வகுமார், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியர் எஸ். செல்வமுரளி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.