வடமராட்சியில் விபத்து ஒருவர் படுகாயம்
வடமராட்சி மந்திகை பகுதியில் சற்று முன் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தில் துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 39) என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.
சற்று முன் பருத்தித்துறை பகுதியில் இருந்து நெல்லியடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், நெல்லியடி பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த டிப்பர் வாகனம் மந்திகை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட போது இவ்விபத்து நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.