Sat. Feb 15th, 2025

வடமராட்சியில் ரெலிக்கொம் வயர்கள் அறுக்கப்பட்டு நூதன திருட்டு – திருடர்களை பிடிப்பதில் பொலீஸார் அசமந்த போக்கு

வடமராட்சி பகுதியில் தொலைத் தொடர்பு வயர்கள் அறுக்கப்பட்டு அதிலிருந்து செப்புக் கம்பிகளை களவெடுக்கும் சம்பவம் அதிகரிக்கப்பட்ட போதிலும் திருடர்களைப் பிடிப்பதில் பொலீஸார் அசமந்த போக்கை காட்டி வருவதாக மக்கள் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

நெல்லியடி பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆனி மாதம் முதல் கடந்த 9ம் திகதி வரை பல தடவைகள் தொலைத் தொடர்பு வயர்கள் அறுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொலைத் தொடர்பு பிராந்திய காரியால உத்தியோகத்தரால் பல தடவைகள் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் திருடர்களை கண்டு பிடிப்பதில் பொலீஸார் அசமந்த போக்கை காட்டி வருவதாக அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதனால் தமது அன்றாட வேலைகளை குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியாதுள்ளதாக அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த திருட்டு சம்பவத்தால் பலர் பாதிக்கப்படுவதனால் நெல்லியடி பொலீஸார் அக்கறை காட்டி திருடர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்