Thu. May 30th, 2024

வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், கஞ்சி வழங்கி அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதலாவது நாளில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய கம்பர்மலை வன்னிச்சி அம்மன் கோவிலில் பூசை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு,
கம்பர்மலை சந்தியில் பாரதி இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்திலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்,
மேஜர்  பண்டிதரின் தாயார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் தயாபரன் அவர்களும் ஈடுபட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்