Fri. Jan 17th, 2025

வடமராட்சியில் கன மழையால் 834 பேர் பாதிப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதில் வடமராட்சியில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 204 பேரும், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 630 பேருமாக மொத்தம் 834 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 234 குடும்பங்களைச் சேர்ந்த 766 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 950பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 191பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்