Mon. Aug 10th, 2026

வடமராட்சியில் இளம் தாய் திடீர் மரணம்

இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் தீடிரென உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த இளம்தாய் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த நி – விதுஷா வயது 25 என்ற  இளம் தாயை உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண்  பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்  குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. நல்ல உடல் நலத்துடன் தாயும் இரு குழந்தைகளும் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாய் தீடிரென  உயிரிழந்தமை அதிர்ச்சியையும் துயரத்தையும்  ஏற்படுத்தியுள்ளது  சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed