Sat. Apr 11th, 2026

வடமராட்சியில் இரு உண்டியல்களை திருடிய நபர் கைது

வடமராட்சியில் இரு கோயில்களின் உண்டியலைத் திருடி நபரை நெல்லியடி பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

வடமராட்சி யார்கரு பிள்ளையார் ஆலயம் மற்றும் அதன் அருகில் இருந்த வைரவர் கோவில் போன்றவற்றில் உண்டியலில் உள்ள பணம் களவாடப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெல்லியடி விசேட பிரிவின் தகவலின் அடிப்படையில், நெல்லியடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொலீஸ் பரிசோதகர் கஜான் புத்திக தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் விசாரணைகளை ஆரம்பித்து கண்காணிப்பு கமராவின் உதவியுடன் நேற்று வியாழக்கிழமை காலை கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed